தற்போது சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பினை சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது, அதன்படி சென்னையில் நான்கு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்றும் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி சென்னை அடுத்துள்ள மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வருகின்ற மார்ச் 8-ஆம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பராமரிப்பு பணியை 11ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறியுள்ளது.
இதன் காரணமாக வட சென்னை பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் மாதவரம், மணலி, திருவொற்றியூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பகுதி ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு உள்பட பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடாக புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வடசென்னை பகுதிகளான மாதவரம், மணலி, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்கு மாற்று ஏற்பாடாக உடலில் அமைந்துள்ள 300 எம்.எஸ்.டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பராமரிப்பு பணிகள் நடைபெறும் தேதி அன்று தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ளுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.