Connect with us

முக்கிய அறிவிப்பு: இன்று மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு! காரணம் மற்றும் பின்னணி என்ன?

vote 1280

Tamil Nadu

முக்கிய அறிவிப்பு: இன்று மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு! காரணம் மற்றும் பின்னணி என்ன?

முக்கிய அறிவிப்பு: இன்று மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு! காரணம் மற்றும் பின்னணி என்ன?

இன்றைய தினம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதன் படி இன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

நேற்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் கூட்டணிகளுக்கு எந்தெந்த பகுதிகளில் பதவிகள் ஒதுக்கப்பட்டது குறித்தான பட்டியலும் வெளியிடப்பட்டது.

அதன்படி கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே ஒரு மாநகராட்சி ஒதுக்கியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உள்ள நிலையில் இன்று பல இடங்களில் விறுவிறுப்பாக மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஆனால் ஒரு நகராட்சியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்தல் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

27 கவுன்சிலர்கள் உள்ள நிலையில்  13 கவுன்சிலர்கள் மட்டுமே வந்ததால் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை போல் தேவகோட்டை நகராட்சியில் மறைமுக தேர்தல் நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தேவகோட்டை நகராட்சியில் தேர்தல் அதிகாரி வராதாதால் மறைமுக தேர்தல் நடைபெறவில்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top