ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்த நாடுகளின் பொருளாதாரம் தான் பாதிப்பு..!
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி போரை அறிவித்தது. இதற்காக ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் அறிவிப்புகளை வெளியிட்டன. அதுவும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன.
இந்த நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் மேற்கு நாடுகள் மீது பொருளாதார பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது தடைகளை விதித்த மேற்கு நாடுகளின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து தங்களுக்குத் தானே பொருளாதார சீரழிவுகளை சந்தித்து கொண்டுள்ளன என்று அவர் கூறினார். உள்நாட்டு பொருளாதார நிலை குறித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின் பணவீக்கம் சீராகி வருவதாக கூறினார்.
மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்புகள் கடனளிப்பதை எளிதாக மாற்றியுள்ளன என்றும் ரஷ்ய அதிபர் புதின் கூறினார். பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க பட்ஜெட்டை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். வெளிநாட்டு வர்த்தகங்களில் தேசிய நாணயங்களை பயன்படுத்துவதற்கான செயலை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
