கடற்கரை-தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவை பாதிப்பு! காற்றில் பறந்த தனிமனித இடைவெளி புறநகர் ரயில் பாதிப்பு! காற்றில் பறந்த தனிமனித இடைவெளி!!
செலவு குறைவாகவும் விரைவாகவும் மேற்கொள்ளப்படும் பயணம் என்றால் அதனை தொடர்வண்டிப் பயணம் என்றே கூறலாம். பெருவாரியான மெட்ரோ நகரங்களில் ரயில் போக்குவரத்து சேவையை பொதுமக்கள் பலரும் பயன்படுத்துகின்றனர்.
பல இடங்களில் ரயில் போக்குவரத்து சேவை பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த கூட்ட நெரிசல்களில் மக்கள் பயணிக்கும் நிலைமை ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது.
அந்த வரிசையில் இன்றைய தினம் கடற்கரை தொடங்கி தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே புறநகர் ரயில்சேவை ஒரு மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது.
கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் ரயில் பயணிகள் தவித்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரயில் சேவை இல்லாத நிலையில் அலுவலக பணிக்கு சென்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதில் பெரும் சிக்கல் நிலவியது.
இதனால் வேறு வழியின்றி புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்தது. கூட்ட நெரிசல் அதிகரித்ததுள்ளதால் பயணிகள் பெரும் தவிப்பில் உள்ளாகியுள்ளனர். புறநகர் ரயில்களில் பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்துள்ளதால் தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது.
