
தமிழகம்
மின்வெட்டு மத்தியில் மின்சார உற்பத்தி பாதிப்பு !! கண்டுகொள்ளுமா அரசு ..?
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல்மின் நிலையத்தில் இருக்க கூடிய 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 யூனிட்டுகள் கொண்ட பழமையான அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. குறிப்பாக 1 யூனிட் 210 மெகாவாட் திறன்கொண்ட மொத்தம் 5 யூனிட்களில் 1050 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 5 யூனிட்டுகள் கொண்ட மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோடைகாலங்களில் அதிகமாக மின்சாரம் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 4 அலகுகளில் மின் உற்பத்தியை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றும், நாளை மட்டுமே மின் உற்பத்தி செய்ய நிலக்கரி இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைப்பது குறிப்பிடத்தக்கது.
