Connect with us

உடனடியாக பஞ்சு விலையை குறைக்க வேண்டும்! திருப்பூரில் தாறுமாறாக உயரும் நூல் விலை!!

cottonn

Tamil Nadu

உடனடியாக பஞ்சு விலையை குறைக்க வேண்டும்! திருப்பூரில் தாறுமாறாக உயரும் நூல் விலை!!

உடனடியாக பஞ்சு விலையை குறைக்க வேண்டும்! திருப்பூரில் தாறுமாறாக உயரும் நூல் விலை!!

நம் தமிழகத்தில் பல்வேறு விதமான பொருட்களின் விலை அதிகரித்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக நெசவுத் தொழிலாளர்களின் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் நூல்களின் விலை அதிகரித்துள்ளது.

இதுபற்றி நடவடிக்கை எடுக்க எதிர்க் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி ஜவுளித்துறையை காப்பாற்ற மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளார்.

அதன் ஒரு கட்டமாக பஞ்சு விலையை குறைத்து ஜவுளித்துறை காப்பாற்ற மாநில அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜவுளித் தொழிலை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழகத்தில் நூற்பாலைகள் நூல் உற்பத்தி குறைந்துள்ளதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். திருப்பூரில் அனைத்து வகையான நூல்களுக்கான விலையில் கிலோவுக்கு 30 ரூபாய் உயர்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. திருப்பூரில் விலை உயர்வால் ஒரு கிலோ 100 ரூபாய் 365 லிருந்து ரூபாய் 435 ஆக உயர்ந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top