ரஷ்யா மீது பொருளாதாரத் தடையா? 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து உடனடி நீக்கம்!
கடந்த இரண்டு வாரங்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா உக்கிரமாக போர் புரிந்து கொண்டு வருகிறது. இதன் விளைவாக உக்ரைனில் உள்ள பல பகுதிகளில் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உக்ரைன் மீது உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று பல நாடுகள் அறிவுறுத்தின.
அதோடு மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தது. அமெரிக்காவும் ரஷ்யாவுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தது. அதே வேளையில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக மில்லியன் கணக்கான அளவில் டாலர்களை அளித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சில நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு இராணுவ உதவிகளையும் வழங்கியது. இதனால் கோபமடைந்த ரஷ்யா தற்போது நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து சில நாடுகளை நீக்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி உக்ரேன் மீதான படையெடுப்பின்போது ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்து நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா உடனடியாக நீக்கியுள்ளது. அதில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகியவற்றை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியதாக அறிவித்துள்ளது. கூடவே சிங்கப்பூர், ஜப்பான், நார்வே,தென்கொரியா, தைவான் ஆகியவற்றை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியதாக அரசு அறிவித்துள்ளது.
