ஜெயலலிதா மரணத்தில் விரைவில் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் செய்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்டம் கொடிசியா பகுதியில் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் பேசிய தமிழக முதல்வர், தமிழகத்தில் 234 தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ-க்களிடம் தொகுதி பிரச்சனைகளை கேட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதே போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணமானது மர்மமாக முறையில் இருந்ததால் இபிஎஸ் உத்தரவின் படி கமிஷன் நடைப்பெற்றதாக கூறியுள்ளார். அந்த சூழலில் திமுக ஆட்சிக்கு வந்தால் முறையான விசாரணை நடைப்பெற்று தெரிவித்தார்.

தற்போது ஆறுமுகசாமி ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் சட்டமன்றத்தில் வைத்து வெளிப்படையாக கூறுவதாக தெரிவித்துள்ளார். அதே போல் தேர்தல் வாக்குறுதிகள் அளித்ததுபோல் 70 நிறைவேற்றி இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் திட்டமானது விரைவில் செயல்படுத்த இருப்பதாகவும். குறிப்பாக நிதிநிலை பிரச்சனை சரி செய்தவுடம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment