தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க அறிவுரை- பிரதமர் மோடி;

இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை இந்தியாவில் தொடர்ந்து இரண்டு முறையாக பாரத பிரதமராக நரேந்திர மோடி திகழ்ந்து வருகிறார்.

மேலும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாஜகவின் கையை ஓங்கி உள்ளது என்று கூறலாம். ஏனென்றால் அவ்வப்போது நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவினர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாஜகவினருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி பாஜகவினருக்கு அறிவித்தல் வழங்கி உள்ளார்.

பாஜகவின் கொள்கைகளை அனைத்து கிராமங்களுக்கும் ஒன்று செல்ல வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பாஜக தொண்டர்களை மக்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். டெல்லியில் பாஜக தேசிய பொது குழுவில் பேசிய பிரதமர் மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கவும் அறிவுரை செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.