நான் யார் தெரியுமா? டாடி ஆறுமுகத்தின் பையன்டா; எனக்கே சரக்கு இல்லையா?

யூடியூப்பில் கிராமத்து ஸ்டைலில் விதவிதமாக சமைத்து தமிழகத்தில் அதிக மக்களிடம் பார்க்கப்படும் ஒரு சேனலாக காணப்படுகிறது வில்லேஜ் சமையல். இந்த வில்லேஜ் சமையலில் ஹீரோவாக காணப்படுகிறார் டாடி ஆறுமுகம். அவருக்காகவே பலரும் அவரது வீடியோக்களை கண்டு மகிழ்ந்தார்.

டாடி ஆறுமுகம் son

இந்த நிலையில் அவரின் பெயரை வைத்துக் கொண்டு அவரது மகன் தகராறு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கிராமத்து பின்னணியில் விதவிதமான அசைவ உணவுகளை சமைத்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் டாடி ஆறுமுகம்.

தந்தை ஆறுமுகத்துக்கு இருக்கும் சமையல் கலைஞரை, உலகுக்கு அறிமுகப்படுத்தி மாதம் பல லட்சங்களில் சம்பாதிக்க மகன் கோபிநாத். டாடி ஆறுமுகம் என்ற பெயரில் புதுச்சேரியில் 3 இடங்களில் உணவகங்கள் நடத்தி வருகிறார் கோபிநாத்.

இந்த நிலையில் மகன் கோபிநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பர்களுடன் AK டார்வின் என்ற மதுகூடத்துடன் கூடிய ஹோட்டலுக்கு சென்று உள்ளார். முதல் இரண்டு சுற்று மது உள்ளே போனதும் ஊழியர்களை தகாத சொற்களில் வசை பாடியதாக கோபிநாத் மீது ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஊழியர்களை தேவையில்லாமல் அழைத்து மிரட்டுவதும் ஆக கோபிநாத் அலப்பறை செய்ததாக கூறுகின்றனர் ஹோட்டல் தரப்பினர். இரவு 8 மணிக்கு கோபிநாத் அண்ட் கோப்புக்குள் நுழைந்த நிலையில் 11 மணி ஆகிய பின்னும் மது கேட்டு தகராறு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜார்ஜஸ் சினாஸ் என்ற ஊழியர் 11 மணிக்கு மேல் மது விற்பதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார். நான் யார் தெரியுமா? டாடி ஆறுமுகத்தின் மகன், எனக்கு சரக்கு இல்லை என்கிறாயா? என்று ஆபாச சொற்களால் பேசியுள்ளார் கோபிநாத்.

காலி பீர் பாட்டிலால் ஜார்ஜஸ் சினாஸ்ன் தலையில் அடிக்கப் பாய்ந்த போது, அவர் தடுத்ததால் கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மூன்று பேரும் சேர்ந்து ஜார்ஜஸ் சினாஸ்ன் அடித்து கண்ணாடி டேபிள் உள்ளிட்டவற்றையும் அடித்து உடைத்து நொறுக்கினர்.

தகவல் அறிந்து போலீசார் வந்தபோது அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் கோபிநாத். கோபிநாத் அங்கிருந்து அப்புறப்படுத்த ஊழியர் தரப்பில் புகார் அளிக்குமாறு கூறி சென்ற போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயராம், தாமு ஆகியோரை தேடுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment