
தமிழகம்
கலைஞரின் சிலையை திறந்து வைத்ததில் மிக்க மகிழ்ச்சி!-வெங்கையா நாயுடு;
இன்றைய தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஏன் என்றால் இன்றைய தினம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
அதிலும் அந்த சிலையை தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் முதலாவதாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இன்றளவும் மிக நெருங்கிய நண்பராக குடியரசுத் துணைத்தலைவர் திகழ்கிறார் என்றும் கூறினார்.
மேலும் குடியரசுத் துணை தலைவரும் சிறப்புரை ஆற்றி கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர் கலைஞர் சிலையை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மக்களுக்காக உழைத்தவர் கலைஞர் என்றும் புகழாரம் சூட்டினார்.
இந்தியாவின் பெருமைமிகு முதலமைச்சர் கலைஞர் ஒருவர் தான் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் கலைஞர் என்றும் கூறினார்.
என் இளம் வயதில் கலைஞரின் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன் என்றும் கூறினார். பன்முகத்தன்மை, அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர் கலைஞர் என்றும் புகழாரம் சூட்டினார்.
