News
சட்டவிரோதமாக மது விற்பனை; போலீஸ் மீது தாக்குதல்! பெண் உள்பட 8 பேர் கைது!!
தற்போது நம் தமிழகத்தில் ஊரடங்கு காலம் நிகழ்கிறது. அதுவும் தமிழகத்தில் மூன்று வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் அடுத்த வாரமும் இந்த ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு சார்பில் நேற்றைய தினம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த காலகட்டத்தில் பலவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் காய்கறிகள் போன்றவை நம் வீடு தேடி வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் தமிழகத்தில் அதிகம் வருமானம் ஈட்டும் தொழிலாக காணப்படுகின்ற மதுபான விற்பனையும் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் பலரும் இந்த மதுபானங்களை ஊரடங்கு முந்தைய நாட்களிலேயே மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துள்ளனர். மேலும் பல பகுதிகளில் இந்த மதுபானம் ஆனது போலீசாருக்கு தெரியாமல் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் அவ்வப்போது அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை கைது செய்து வருகின்றனர் காவல்துறையினர். இதுபோன்ற சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது. ஆனால் கைது செய்ய சென்ற காவல்துறையினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அதன்படி ஓட்டேரி எஸ் எஸ் புறத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர் மீது கும்பல் தாக்குதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சட்டவிரோதமாக மது விற்ற அவர்களை பிடிக்க முயன்ற போது இத்தகைய தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதில் படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர்கள் மணிவண்ணன், சஜிபா, காவலர் சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவலர்களை தாக்கிய காஞ்சனா நந்தினி சசிகலா வினோத் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.
