சட்டவிரோதமாக இயங்கும் பைக், டாக்சிகள் – போக்குவரத்து துறை கண்காணிப்பு

நகரில் பைக் டாக்சிகள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதைக் கண்டித்து ஆட்டோரிக்‌ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இரு சக்கர பைக் டாக்சிகளின் சட்டவிரோத இயக்கத்திற்கு எதிராக போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

அனைத்து ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்ரமணியன் கூறியதாவது: பைக் டாக்சிகளை சட்டவிரோதமாக இயக்குவதற்கு எதிராக நகர் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு பைக் டாக்ஸி சேவைகளை வழங்குவதற்காக ரேபிடோவுடன் சென்னை மெட்ரோ ஒப்பந்தத்தை மையமாக வைத்து, ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் திங்கள்கிழமை பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில், அனைத்து மண்டல அலுவலகங்கள், ஆர்டிஓக்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போன்ற போக்குவரத்து அல்லாத வாகனங்களை வாடகைக்கு ஏற்றிச் செல்லவும், போக்குவரத்திற்கு பயன்படுத்துவதையும் சரிபார்த்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகா தேர்தலில் பாஜக -வை எதிர்த்து அதிமுக போட்டி!

போக்குவரத்து அல்லாத வாகனங்களை போக்குவரத்து வாகனமாக தவறாக பயன்படுத்துவதாக மாநிலம் முழுவதும் இன்னும் பல புகார்கள் பெறப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.