Connect with us

வில் ஸ்மித் அடித்ததை பற்றி விரைவில் பேசுவேன்! ஆனால் அது வேடிக்கையாக இருக்கும்!!

will smith

பொழுதுபோக்கு

வில் ஸ்மித் அடித்ததை பற்றி விரைவில் பேசுவேன்! ஆனால் அது வேடிக்கையாக இருக்கும்!!

வில் ஸ்மித் அடித்ததை பற்றி விரைவில் பேசுவேன்! ஆனால் அது வேடிக்கையாக இருக்கும்!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 94 வது ஆஸ்கார் விருது அளிக்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருதினை வில் ஸ்மித் பெற்றார். இதைவிட அதிகமாக அவர் செய்த சர்ச்சையான நிகழ்வு தான் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.

ஏன் என்றால் அவர் ஆஸ்கார் விருது விழாவின் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்து ஆஸ்கர் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாகவும் ஆஸ்கர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தன்னை அடித்தது பற்றி தொகுப்பாளர் கிறிஸ் ராக் கூறியுள்ளார். அதன்படி ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித் அறைந்த நிகழ்விலிருந்து நான் இன்னும் மீளவில்லை என்று தொகுப்பாளர் கிரிஸ் ராக் கூறியுள்ளார். வில் ஸ்மித் அறைந்த  விவகாரம் பற்றி நான் விரைவில் பேசுவேன் என்றும் அது தீவிரமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியிருப்பது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top