இது அதுல்ல… இளையராஜா பாடலை காப்பி எடுத்து மலையாளத்தில் ஹிட் கொடுத்து விருது தட்டித் தூக்கிய இசையமைப்பாளர்!

ஒவ்வொரு இசையமைப்பாளரும் மிகுந்த சிரத்தையெடுத்து தனித்தன்மையுடன்  மெட்டுக்களை அமைத்து ரசிகர்கள் விரும்பும்படி பாடல்களைக் கொடுத்து வருகின்றனர். இசையில் உள்ள 7 ஸ்வரங்களை மாற்றி மாற்றிப் போடுவதுதான் வழக்கம் என்றாலும் ஒரு இசையமைப்பாளர் இசையமைத்த பாடலின் மெட்டை அப்படியே மலையாளத்தில் போட்டு ஹிட் கொடுத்த நிகழ்வு நடந்துள்ளது.

இசைஞானி இளையராஜா இசையில் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1993-ல் வெளியான படம்தான் மறுபடியும். அர்விந்த் சாமி, ரேவதி, நிழல்கள் ரவி நடித்த இப்படம் முக்கோண காதல் கதையாக உருவெடுத்தது. விமர்சனத்திலும், வசூலிலும் வெற்றி பெற்ற இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அப்போது வானொலிப் பெட்டிகளை ஆக்கிரமித்தது. குறிப்பாக ஆசை அதிகம் வச்சு  என்ற பாடல் இன்றும் கல்லூரி மாணவிகளின் காதல் பாடலாக விளங்குகிறது. இப்பாடலுக்கு ஆடாத இளம்பெண்களின் கால்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் இப்பாடல் இடம்பெறும். ரவிபாரதியின் வரிகளில் ரோகிணியின் நடிப்பில், ஜானகியின் குரலில் இப்பாடல் இசை ரசிகர்களை காந்தமாகக் கவர்ந்திழுக்கும்.

இந்தப் பாடலின் மெட்டை அப்படியே மலையாளப் படம் ஒன்றில் புகுத்தி அங்கும் ஹிட் கொடுத்து விருதையும் பெற்றிருக்கிறார்கள். அந்தப்படம் தான் மோகன்லால், ஷோபனா நடித்த தென்மாவின் கொம்பத் என்ற படம். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் 1994 வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியது.

ஒரே ஒரு காட்சிக்காக 100 யானைகளைக் களமிறக்கி பிரம்மாண்டம் காட்டிய அந்தக் காலத்து ஷங்கர்

பல்வேறு வகைகளில் இந்தப்படம் விருதுகளை வாரிக்குவித்தது. இப்படத்தின் இசையமைப்பாளர்கள் பெர்னி-இக்னேஷியஸ் என்ற இரட்டையர் ஆவர். இவர்கள்தான் ஆசை அதிகம் வச்சு என்ற மறுபடியும் படத்தில் வந்த பாடலின் மெட்டை “மானம் தெலிங்கே” என்ற பாடலாக மாற்றி அதை ஹிட் வரிசையிலும் சேர்த்தனர். எம்.ஜி. குமார், சித்ரா பாடிய இப்பாடல் அப்போது கேரள தேசமெங்கும் ஒலிபரப்பாகி ஹிட் ஆனது.

இதனால் இளையராஜாவின் மெட்டை காப்பி அடித்து இசையமைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு இவர்கள் மேல் வைக்கப்பட்டது. எனினும் படமானது வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது. மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதினையும் பெற்றுக் கொடுத்தது.

இதுமட்டுமல்லாமல் இப்படத்தின் மூலமாகத்தான் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே தேசிய விருதினையும் தட்டிச் சென்றார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.