தென்னிந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா இன்று மாநிலங்களவை எம்.பி-ஆக பதவி ஏற்றுள்ளார் .
இசையமைப்பாளர் இளையராஜா, தடகல போட்டி வீராங்கனை பி.டி உஷா, தர்மசால கோவில் நிர்வாக அறங்காவலர் மற்றும் பிரபல எழுத்தாளர் ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி களாக கடந்த சில தினங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டனர்.
இன்றையதினத்தில் மாநிலங்களவை எம்.பி-யாக பதவியேற்க இளையராஜா டெல்லி பயணம் மேற்கொண்டார். இவருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சூழலில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழில் உறுதி மொழி ஏற்ற இளையராஜா தற்போது எம்.பி.யாக பதவியேற்றார் .
இவருக்கு சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.