Entertainment
இளையராஜா என் படத்துக்கு இசையமைப்பதே எனக்கு பெருமைதான்
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தீவிர இளையராஜா ரசிகர் என்பது பலருக்கு தெரிந்திருக்காது. ஒரு முறை ஒரு தனியார் தொலைக்காட்சி கொடுத்த விருதை நீங்க யாருக்கு டெடிகேட் பண்றிங்க என கேட்கப்பட்ட கேள்விக்கு இதை இளையராஜா சாருக்கு டெடிகேட் பண்றேன் என்று சொன்னார்.

இவரின் தமிழரசன் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். பாடகர் ஜேசுதாஸ் கூட நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தில் பாடியுள்ளார்.
நான் கர்னாடக சங்கீதமோ, வெஸ்டர்ன் மியூசிக்கோ கத்துக்கலை. எனக்குத் தெரிஞ்ச ஒரே இசை வடிவம் இளையராஜா சார் மட்டும்தான். என்னிடம் ஒரு இயக்குநர் பாடலுக்கான சூழலை சொல்லும்போது, இதேமாதிரியான சூழலுக்கு இளையரஜா சார் என்ன பாட்டு பண்ணியிருக்காரோ அதைத்தான் ரெபரென்ஸா எடுத்துக்கொள்வேன் அப்படித்தான் இப்பவரை மியூசிக் பண்ணிட்டு இருக்கேன். ‘தமிழரசன்’ படத்துக்கு ராஜா சார் இசையமைப்பதே பெருமைதான் என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
