பாட்டுக்குள் பாட்டெடுத்த இசைஞானி.. 80 களில் ஹிட் ஆன பாடலை 2கே-வில் புகுத்தி செஞ்ச தரமான சம்பவம்

அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் எம்.எஸ்-விஸ்வநாதன் இசையில் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் என்ற பாடல் வாணி ஜெயராம் குரலில் ஒலிக்கும். உண்மையாகச் சொல்லப்போனால் சரிகமபதநி என்ற இந்த ஏழு ஸ்வரங்களைத் தாண்டி இசை என்பதே கிடையாது. எல்லாமே இதில்தான் அடங்கும். இதற்குள் இசையமைப்பாளர்கள் தங்களது பாடலில் செய்யும் மேஜிக் தான் ஏராளம். இதில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அடுத்து இளையராஜா செய்த இசை வித்தைகள் ஏராளம்.

அப்படி இளையராஜா செய்த ஒரு மேஜிக் பாடல் தான் பிதாமகன் திரைப்படத்தில் இடம்பெற்ற “இளங்காற்று வீசுதே பாடல்..” இந்தப் பாடலில் இடையில் வரும் சரணத்தில் வரும் வரிகளைக் கேட்டுப் பாருங்கள்…

பின்னிப் பின்னிச்
சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும்
வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான்
இணைஞ்சி இருக்கு

என்று அமைந்திருக்கும். இந்த வரிகளை அதே ராகத்துடன் பாடி ரஜினிகாந்த் நடித்த புதுக்கவிதை படத்தில் வரும் வெள்ளைப் புறா ஒன்று பாடலுடன் இணைத்துப் பாருங்கள். அப்படியே பொருந்தும். இந்தப் பாடலில் ஜானகி பாடும் முதல் ஹம்மிங்கிலேயே இளையராஜா நம்மைச் சொக்க வைத்து விடுவார்.

இந்த ஹம்மிங்கும் பிதாமகன் இளங்காற்று வீசுதே பாடலும் ஒன்றுக் கொன்று பிண்ணிப் பிணைந்து இருக்கும். இதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் பாடலின் வரிகளும் கூட ஒன்னுக்கொன்னுதான் இணைஞ்சு  இருக்கு என இயல்பாக அமைந்து விட்டது தான். இப்படித்தான் பாடலானது உருவாகிறது.

பாட்டுக்குள் பாட்டெடுத்த இசைஞானி.. 80 களில் ஹிட் ஆன பாடலை 2கே-வில் புகுத்தி செஞ்ச தரமான சம்பவம்

80 களின் ரசிகர்களுக்கு ஹிட் கொடுத்த இளையராஜா 2கே கிட்ஸ் ரசிகர்களும் கொண்டாடும் வகையில் 80-ல் போட்ட ஒரு பாடலை சற்று டியூனை மட்டும் மாற்றி மீண்டும் ஹிட் கொடுத்திருக்கிறார். ராஜா எப்போதும் ராஜாதான். இவ்வாறு பாட்டுக்குள் பாட்டெடுப்பது இசையமைப்பாளர்களுக்கு ஒன்றும் புதிய விஷயம் இல்லை என்றாலும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அதை மீண்டும் சூப்பர் ஹிட் பாடலாக மாற்றுவது என்பது சவாலான காரியம்.

அதனை எளிதாக செய்வது இசைஞானியின் இசைத் திறைமையே காட்டுகிறது. மேலும் பல இசையமைப்பாளர்கள் இதைப் போன்று பாட்டுக்குள் பாட்டெடுத்து மெட்டமைப்பது வழக்கம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...