Entertainment
இளையராஜா பாராட்டு விழாவிற்கு நேரில் சென்று ரஜினியை அழைத்த விஷால்
அன்னக்கிளி படம் மூலம் இசை வாழ்வை துவக்கிய இசைஞானி இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இசையுலகின் முடிசூடா மன்னனாக விளங்குகிறார்.

இவரது ராஜகீதங்கள் ரசிகனின் ராத்திரி நேர ராஜ ராகமாகும். பலரை தாயின் தாலாட்டுக்கு பிறகு இரவில் தாலாட்டி தூங்க வைத்தது இளையராஜாவின் பாடல்களாகும்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, இளையராஜா 75 எனும் விழா வெகு பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இளையராஜா 75 விழா நடக்க உள்ளது. 2ம் தேதி அன்று, தென்னிந்தியத் திரையுலகின் முக்கியப் பிரபலங்கள் உட்பட அனைவரும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மறுநாள் 3ம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் முக்கிய உறுப்பினர்க்ள் நேரில் சென்று அழைப்பை கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் விஷால் தலைமையில் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து, அழைப்பை வழங்கி அவசியம் வந்து கலந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
