இன்னும் சில காட்சிகள் கேட்ட இளையராஜா.. எடுத்துக் கொடுத்த கஸ்தூரிராஜா.. உருவான சூப்பர்ஹிட் சோகப் பாடல்

இளையராஜாவை இசைஞானி என்று ஏன் சொல்லுகிறோம் என்றால் ஒரு திரைப்படத்தில் இயக்குநர் எப்படி எவ்வளவு முக்கியமோ அதற்கு நிகரான அந்தஸ்தை உடையவர் இசையமைப்பாளர். ஏனெனில் இசையமைப்பாளருக்குத்தான் ஒரு காட்சியில் ஹீரோவாகவும், ஹீரோயினாகவும், வில்லனாகவும், காமெடியனாகவும் தன்னை உருவகப்படுத்தி காட்சிக்குக் காட்சி மெருகேற்ற முடியும்.

அப்படி இளையராஜா மெருகேற்றி ஹிட் கொடுத்த படங்கள் ஏராளம். இவ்வாறு இளையராஜா இயக்குநர் எடுத்துக் கொடுத்த படத்தில் மேலும் சில காட்சிகள் சேர்த்து அதற்கு ஓர் அற்புதமான பாடலையும் கொடுத்திருக்கிறார். அந்தப் படம் தான் என் ராசாவின் மனசிலே.

இயக்குநராக கஸ்தூரிராஜாவுக்கும், ஹீரோவாக ராஜ்கிரணுக்கும், ஹீரோயினாக மீனாவிற்கும், காமெடி நடிகராக வடிவேலுவுக்கும் ஒரே நேரத்தில் சுக்கிர திசை அடித்த படம். அதற்கு முழுக் காரணம் இளையராஜா என்னும் இசை அரசன் தான். 1991-ல் வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படம் திரையிட்ட இடமெல்லாம் வெள்ளி விழா கண்டது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. கேஸட்டுகளில் என் ராசாவின் மனசிலே ஆல்பம் விற்பனை சக்கைப் போடு போட்டது.

நடிகர் திலகத்துக்கு ஜோதிடம் பார்த்த வெண்ணிற ஆடை மூர்த்தி.. அப்படியே பலித்த சம்பவம்.. வியந்து போன சிவாஜி

குறிப்பாக குயில் பாட்டு, பாரிஜாதப் பூவே, சோலைப் பசுங்கிளியே, போடா போடா புண்ணாக்கு போன்ற பாடல்கள் இன்றும் மனதை விட்டு அகலாத ஹிட் பாடல்கள். இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்றொரு சோகப் பாடல்தான் பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும்.. பாடல். இந்தப் பாடல் முதலில் திரைப்படத்தில் கிடையாதாம். இளையராஜாவிடம் பின்னனி இசைக்காக மொத்தப் படத்தையும் கஸ்தூரிராஜா முடித்துக் கொடுத்திருக்கிறார்.

படத்தைப் பார்த்த இளையராஜா படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியைச் சொல்லி வேறு ஏதாவது எடிட்டிங்கில் நீக்கப்பட்ட காட்சிகள் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அப்படி இல்லையெனில் தான் சொல்லும் காட்சியை ஷுட்டிங் எடுத்து வா என்று கஸ்தூரிராஜாவிடம் கூறியிருக்கிறார். கஸ்தூரிராஜாவும் இளையராஜா கேட்டபடி காட்சியைக் கொடுக்க அந்த இடத்தில் இளையராஜா போட்ட டியூன்தான் பெண் மனசு ஆழமென்று பாடல்.

இளையராஜாவே இந்தப் பாடலைப் பாட படத்தில் இடம்பெற்ற காட்சியைக் கண்டு கஸ்தூரிராஜா மெய்சிலிர்த்து விட்டாராம். இவ்வாறு ஒரு இயக்குநரின் சுமையை பல மடங்கு குறைத்து தான் ஏற்றுக் கொண்டு படத்தின் வெற்றிக்காக மட்டுமன்றி இசையில் தன்னால் எவ்வளவு ஒரு படத்திற்கு மெனக்கெட முடியுமோ அந்த எல்லை வரை சென்று இசையமைப்பதே இசைஞானியின் ஸ்டைல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...