இளையராஜா விஷயத்தில்…. ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால் அப்படியே விட்டு விடுங்கள்!!
ஏப்ரல் 14ஆம் தேதி சட்ட மாமேதை அம்பேத்காரின் 131 வது பிறந்த நாள் நாடெங்கும் கொண்டாடப்பட்டது. அந்த தினத்தில் அம்பேத்கர் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா கருத்து கூறியிருந்தார்.
அவரின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்கப் போவதில்லை, இதனால் தான் பின்வாங்கப் போவதில்லை என்று இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் 2 நாட்களுக்கு முன்பு இளையராஜா கூறியதாக கூறினார்.
இந்த நிலையில் இளையராஜா பேசிய கருத்துக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் கூறியுள்ளார். அதன்படி ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால் அதை கருத்து சுதந்திரமாக கருதி நிற்க வேண்டுமே தவிர விமர்சிக்கக் கூடாது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய இளையராஜா கருத்துக்கு எதிராக பலரும் பதிவிட்டு வருவது குறித்து கேள்விக்கு தமிழிசை பதில் அளித்தார். சென்னை தரமணியில் அம்பேத்கரின் 131வது பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார்.
மோடிதான் பிரதமர் ஆக இருக்க அம்பேத்கர் தான் காரணம் என்று கூறி இருப்பதாக குறிப்பிட்டார் தமிழிசை. அரசியலமைப்பு சட்டம் தான் அனைவருக்கும் அதிகாரம் வழங்கியுள்ளது என்றார் தமிழிசை சவுந்தரராஜன்.
அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அம்பேத்கர்கான நமது அஞ்சலியாக இருக்க வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். நமது புனித நூல் அரசியலமைப்பு சட்டம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டினார் தமிழிசை சவுந்தரராஜன்.
