தொழில்நுட்பம் வளராத காலத்திலே இப்படி ஒரு ஐடியா செய்து ரஜினிகாந்த் பட பாடலை உருவாக்கிய இசைஞானி இளையராஜா…

இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவரும் இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசை ஆகியவற்றில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 950 க்கும் மேலான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை அவரது கலை சேவைக்காக கொடுத்து கௌரவித்துள்ளனர்.

இளையராஜா அவர்களின் பிள்ளைகளான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பவதாரிணி ஆகிய மூவரும் இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட அணைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

1989 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ‘ராஜாதி ராஜா’. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். நதியா மற்றும் ராதா நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இளையராஜா உருவாக்கிய ஒரு பாடலில் சுவாரசியமான கதை ஒன்று உள்ளது.

அது என்னவென்றால், ராஜாதி ராஜா திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ‘வா வா மஞ்சள் மலரே’ ஆகும். இந்த பாடலில் இரண்டு மனோ மற்றும் இரண்டு சைலஜா பாடுவது போல் அமைந்திருக்கும். இதற்காக இளையராஜா அவர்கள் இரண்டு முறை பாடலை பதிவு செய்துள்ளார். முதலில் ‘பா’ சுரஸ்தானத்தை அடிப்படையாக வைத்து பட வைத்திருப்பார். மறுமுறை ‘ச’ சுரஸ்தானத்தை வைத்து இறக்கி பாட வைத்து இரண்டையும் இணைத்து ‘வா வா மஞ்சள் மலரே’ பாடலை உருவாக்கியுள்ளார் இளையராஜா. தொழில்நுட்பம் வளராத அந்த காலத்திலே இப்படி ஒரு ஐடியா பண்ணி பாடலை உருவாக்கி தான் ஒரு இசைஞானி என்று நிருபித்துள்ளார் இளையராஜா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews