சின்னதாயவள் தந்த ராசாவே.. வாலியின் வரிகளை படிச்சதும் கண் கலங்கி போன இளையராஜா.. மனம் உடையும் பின்னணி..

தமிழ் சினிமாவின் பல இயக்குனர்கள் மிக தனித்துவமாக திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர்களாக உள்ளனர். அந்த வகையில் மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், ஷங்கர், பா. ரஞ்சித், வெற்றிமாறன் என பலரை சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் திரைப்படங்களில் வரும் காட்சிகளை வைத்தே இயக்குனர்கள் யார் என்பதை சரியாக கணித்து கொண்டே போகலாம்.

இதற்கிடையே சில பழைய இயக்குனர்கள் சினிமாவில் அப்டேட் செய்து கொள்ள முடியாமல் தவித்து வரும் சூழலில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரெண்டிற்கேற்ப வகையில் திரைப்படங்கள் எடுத்து வருவதில் கில்லாடியாக இருந்து வருபவர் தான் மணிரத்னம்.

முதலில் இவர் இயக்கிய திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்து வந்த நிலையில், ரோஜா படத்தில் இருந்து தற்போது வரை ஏ. ஆர். ரஹ்மான் தான் இசையமைத்து வருகிறார். வயதான இயக்குனராக இருந்தாலும், தற்போது இருக்கும் இளம் தலைமுறை ரசிகர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு காட்சிகளில் கூட அந்த அளவுக்கு புதுமையாக விஷயங்களை புகுத்தி அற்புதம் செய்து வருகிறார் மணிரத்னம்.

அவரது இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி, காற்று வெளியிடை என பல திரைப்படங்கள், இளைஞர்களின் காதலை மிக அழகாக சொல்லும் வகையில் அமைந்திருந்தது. இதற்கிடையே, எம்ஜிஆர் தொடங்கி இந்த காலத்து பிரபலங்கள் வரும் பலர் கனவு கண்டும் எடுக்க முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவலையும் திரைப்படமாக மாற்றி வெற்றி கண்டிருந்தார்.

இரண்டு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம், பெரிய அளவில் ஹிட்டாகி இருந்ததையடுத்து தற்போது கமல்ஹாசனை புதிய திரைப்படத்தில் இயக்கி வருகிறார் மணிரத்னம். தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், கமலுடன் அபிராமி, சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வரும் நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான தளபதி படத்தில் வரும் ஒரு பாடலின் பின்னணியை பற்றி தற்போது பார்க்கப் போகிறோம். இளையராஜா இசையில் தளபதி படத்தில் உருவான அனைத்து பாடல்களுமே ஹிட்டாக, அதில் வரும் சின்னத்தாயவள் தந்த ராசாவே என்ற பாடலின் பின்னணி தான் பலரையும் மனம் உருக வைத்துள்ளது.

வாலி இந்த பாடலை எழுதி இருக்க, தளபதி படத்தின் இசை பணிகள் மும்பையில் நடந்து கொண்டிருந்துள்ளது. அப்போது, ப்ரொடக்ஷன் மேனஜர் ஒருவர் மூலம் வாலி சென்னையில் இருந்து பாடல்களை எழுதி கொடுக்க, பாடல் ரிக்கார்டிங் நடந்தது. இதில் வாலி எழுதிய சின்னத்தாயவள் பாடலின் வரிகளை பார்த்ததும் இளையராஜா அதிகம் மனம் உருகி போய் விட்டாராம்.

இதற்கு காரணம், இளையராஜாவின் தாய் பெயர் சின்னத்தாய். மேலும் முதல் வரியும் சின்னத்தாயவள் தந்த ராசாவே என வருவது அனைவரது இதயத்தை தொட்டது போல ராஜாவின் இதயத்தையும் தொட்டு விட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...