முதல் பாடலில் தித்திக்கும் அனுபவங்கள்….! ஹம்மிங் போட மெனக்கிட்ட இளையராஜா

மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் முதல் பாடலே ஹம்மிங் சகிதத்துடன் பருவப்பெண்ணின் ஏக்கத்துடன் ஆரம்பிக்கிறது. இது ஒரு செமயான சாங். இப்போது கேட்டாலும் நமக்குள் உற்சாகம் பொங்கும். அந்த இனிய மனது மறக்காத அனுபவத்தை இளையராஜா சொல்லக் கேட்போமா…

Ilaiyaraja2
Ilaiyaraja2

அன்னக்கிளி படத்துக்காக ஒரு ஹம்மிங். அதை நான் முதல்ல கம்போஸ் பண்ணல. சாந்தோம்ல ஒரு வாடகை வீட்டுல குடியிருந்தேன். ஈவினிங் டைம் தினமும் பீச் வழியா காந்தி சிலை வரை நடந்து போவேன். அப்போ தினமும் இந்த ஹம்மிங்க பாடிக்கிட்டே இருப்பேன். அதை எவ்வளவு தடவை பாடிருப்பேன்கறதை உங்களால இமேஜ் பண்ண முடியாது.

நல்லாருக்கா நல்லாருக்கான்னு பார்த்துட்டு அப்படி கம்போஸ் பண்ணது தான் அது. அதுக்கு முழு பாடலும் ரிகர்சல் பண்ணியாச்சு. அதுவும் மச்சான பார்த்தீங்களா சாங்கும் ரெடி. ஜானகி வந்தாங்க. அவங்க பாடுனது ரொம்ப சூப்பரா இருந்தது. தயாரிப்பாளருக்கு நல்ல நம்பிக்கை வந்துட்டு. அதுக்கு அப்புறம் தான் அதை நான் ரெகார்டிங் பண்ணுனேன்.

எப்படின்னா வார்த்தைகளை பாடலுக்கு முதல்லயே கொடுக்கறதனால அந்த வார்த்தைகளை ஒட்டி இசை வந்துடும். அன்னனக்கிளி உன்னைத் தேடுதே. ஆறு மாசம், ஒரு வருஷம் ஆவாரம்பூ மேனி வாடுதே… இது வந்து நான் பொறந்த கிராமத்துப் பகுதிகள்ல பாடக்கூடிய ஒரிஜினலான நாடோடி பாடல்.

Annakkili
Annakkili

புள்ளிப்போட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலைக்காரி என்று தான் அந்தப் பாடல் தொடங்கி முடியும் போது அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று வரும். நான் இருந்த உத்தமபாளையம் பகுதிகளில் எல்லாம் அப்படித் தான் பாடுவாங்க. அதை வந்து நான் பர்ஸ்ட் லைனா வச்சிட்டு அன்னக்கிளி உன்னைத் தேடுதே…ன்னு போட்டேன். அப்போ பூஜை சாங் நாங்க ரெடி பண்றோம். அப்போ கோவர்தன் மாஸ்டர் என்னைத் தொடர்பு கொள்றாரு.

அவர் எம்எஸ்வி கிட்ட வேலை பார்த்தவரு. ஏன்யா முதல் பாட்டுலயே வாடுதே, தேடுதேன்னு போட்டுருக்க. இல்ல அது ஒரிஜினல் போல்க் சாங். மாத்தக்கூடாதுன்னு சொல்லிட்டேன். பஞ்சு அருணாசலம் எப்படின்னா இந்தப் பாடல முதல்ல கவியரசர் கண்ணதாசன் தான் எழுதுறதா இருந்தது. அவரு அன்னைக்கு சிங்கப்பூர் போயிட்டதால பஞ்சு அருணாசலம் தான் எழுதுனாரு.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...