உள்ளாட்சித் தேர்தலில் சோலோவாக களமிறங்கும் ஐஜேகே! போட்டியிடாத இடங்களில் யாருக்கும் ஆதரவு இல்லை!!
நம் தமிழகத்தில் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூட்டணி கட்சிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இன்று காலையில் இருந்து எதிர்க் கட்சியான அதிமுகவுடன் பாஜக கட்சி தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்த ஒரு கூட்டணி கட்சி இல்லாமல் தனித்து போட்டியிட உள்ளதாக ஐஜேகே அறிவித்துள்ளது.
அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார். இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடாத இடங்களில் யாருக்கும் ஆதரவு தருவதில்லை என்று கட்சியின் தலைவர் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.
மக்களின் செல்வாக்குடன் போட்டியிடுகிறோம்; பல்வேறு துறைகளில் மக்களுக்கு தேவையானதை செய்கிறோம் என்றும் சென்னையில் ரவி பச்சமுத்து பேட்டியளித்தார். யாரையும் குறைசொல்லி அரசியல் செய்யும் கட்சி எங்கள் இந்திய ஜனநாயக கட்சி இல்லை என்று அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து கூறினார்.
