ஒரு வருடமாக துன்புறுத்தி 45 நாய்களை கொலை செய்த ஐஐடி நிர்வாகம்!!

அன்பு என்பது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் மத்தியிலும் காணப்படுகிறது.அந்த விலங்குகள் மனிதர்களுக்கு மிகுந்த நண்பர்களாக  காணப்படுகிறது. அந்த விலங்குகளில் குறிப்பாக நாயானது மனிதனுக்கு நன்றியோடு நண்பனாக காணப்படுகிறது. சென்னை ஐஐடி

ஆனால் பல பகுதிகளில் இந்த நாய்கள் மனிதர்களால் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறது. துன்புறுத்துவார்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ஐஐடி நிர்வாகம் மீது நாய் கொலை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்துக்குள் சுற்றிவந்த 186  நாய்களை அடைத்து வைத்ததாக ஐஐடி நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அடைத்து வைத்த நாய்களில் 45 நாய்கள் உயிரிழந்துள்ளன.

ஒரு வருடங்களாக கூண்டுக்குள் அடைத்து வைத்து உணவு, தண்ணீர் வழங்கப்படாததால் 186 நாய்களில் 45 நாய்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

நாய்களை கூண்டில் அடைத்து வைத்த ஐஐடி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கமிஷனரிடம் ஹரிஸ் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து மயிலாப்பூர் துணை கமிஷனர் விசாரிக்க கமிஷனர் உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment