ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த ஐ.ஐ.டி மாணவி: சென்னையில் பரபரப்பு!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மோகன் பதான் என்பவரது மகள் மேகாஸ்ரீ என்பது தெரியவந்தது.

இந்நிலையில் திருமணம் ஆகாத இவர் டெல்லியில் எம்.டெக், பி.எச்.டி முடிந்து இருப்பதாகவும் தற்போது சென்னை அடையாறில் இருக்கும் ஐஐடியில் 3 மாத ஆராய்ச்சி படிப்புகள் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் அடையாரில் படிக்கும் மாணவி ரயில்வே நிலையத்திற்கு எதற்காக வந்தார்? ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஐஐடி மாணவி ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.