பாரில் நடனம் ஆடும் பெண்ணின் அழகில் மயங்கி திருடனாக மாறிய இன்ஜினியர் ஒருவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் ஐஐடி இன்ஜினியரிங் படிப்பு படித்து துபாயில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வேலை நேரம் முடிந்தவுடன் அவர் இரவு நேர விடுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்ததாகவும் அப்போது பாரில் நடனமாடும் பெண் ஒருவரின் அழகில் மயங்கிய அவருக்காக நிறைய பணம் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
தன்னுடைய வருமானம் முழுவதையும் அவர் அந்த பெண்ணுக்காக செலவு செய்து மேலும் அவர் பெண்ணை வசியப்படுத்த வேண்டும் என்பதற்காக திருடியதாக தெரிகிறது. பாரில் நடனம் ஆட வேண்டாம் என்னுடன் வா உன்னை நான் சம்பாதித்து காப்பாற்றுகிறேன் என்று கூறியதாகவும் இதனை அடுத்து தனது வேலையை விட்டுவிட்டு அந்த அழகியுடன் பீகார் வந்ததாகவும் புறப்படுகிறது.
15 ஆண்டுகளாக தான் வேலை பார்த்து சேர்த்து வைத்த பணத்தை அந்த பெண்ணுக்காக தண்ணீரை போல் செலவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் தீர்ந்தவுடன் இனிமேல் அந்த பெண்ணை மகிழ்விக்க என்ன செய்யலாம் என யோசித்து அவர் திடீர் என திருடனாக மாறியுள்ளார்.
தனக்கென ஒரு டீமை ஏற்பாடு செய்து அவர் திருடன் முயற்சித்துள்ளார். கடந்த 11ஆம் தேதி அவர் பெண் ஒருவரிடம் இரண்டு கால் லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை திருடிய போது காவல்துறையினரால் பிடிக்கப்பட்டார். அவரிடமிருந்து பணம் நகை துப்பாக்கி தோட்டா லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது வேலையை இழந்து, தான் சேர்த்து வைத்த பணம் அனைத்தையும் இழந்த அவர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் காதலி தற்போது மீண்டும் துபாய் சென்று பாரில் நடனமாடும் வேலையை செய்து வருவதாக கூறப்படுகிறது.