Island for Sale: அப்பார்ட்மெண்ட் விலைக்கு ஐலாண்ட்; விற்பனைக்கு காத்திருக்கும் தீவு – இவ்வளவு கம்மி விலையா?

இந்தியாவில் உள்ள பெருநகரமான ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் விலையில் ஒட்டுமொத்த தீவும் விலைக்கு வந்துள்ளது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் எக்ஸ்ட்ரா போனஸாக ஆடம்பர வீடு ஒன்றும் உள்ளது.

ஐதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரத்தின் பணக்கார ஏரியாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் விலையில், முழு தீவையும் வாங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள தீவு ஒன்று ஆன்லைனில் ஏலம் விடப்பட்டுள்ள செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் நிகரகுவாவில் உள்ள புளூஃபீல்ட் கடற்கரையிலிருந்து 19.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இகுவானா தீவு. சுமார் 5 ஏக்கர் பரப்பளவிற்கு வாழை மற்றும் தென்னை மரங்கள் நிறைந்த தனியாருக்குச் சொந்தமான இந்த தீவு, Private Islands Inc என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஆன்லைன் பக்கத்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த இணையதளத்தில், “இகுவானா தீவில் மூன்று படுக்கையறைகள், இரண்டு குளியலறைகள் கொண்ட வீடு உள்ளது. இந்த கிச்சன், லிவ்விங் ரூம், நீச்சல் குளம் போன்ற வசதிகளும் உள்ளன. சொகுசு வீடானது அமெரிக்க டெவலப்பர்களால் மேம்பட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் வைஃபை, டிவி கனெக்‌ஷன், செல்போன் சிக்னல் என அனைத்து வசதிகளும் உள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் தளத்தில் ஏலம் நடைபெற்று வரும் நிலையில் இகுவானா தீவின் விலை 4 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ஒட்டுமொத்த தீவின் விலை 3 கோடியோ 87 லட்சம் ரூபாய் ஆகும். அதாவது சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் ஒரு சொகுசு அப்பார்ட்மெண்ட் வாங்கும் விலையில் ஒரு தீவுக்கே சொந்தக்கார் ஆகும் வாய்ப்புள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.