குளிர்கால ஒலிம்பிக்ஸ்: அமெரிக்கா அரசுமுறைப் புறக்கணிப்பு! சீனா கண்டனம்!

2019 நவம்பர் மாதத்தினை யாராலும் மறக்க முடியாது. ஏனென்றால் அப்போதுதான் உலகில் என்ற கொரோனா வைரஸ் உருவாகத் தொடங்கியது. இது முதலில் சீனாவில் உருவாகத் தொடங்கியது. பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் பரவியது.

US vs china article

கொரோனா வைரஸ்க்கு பின்னர் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நட்புறவு மெல்லமெல்ல முடிய தொடங்கியது. குறிப்பாக சீனாவுக்கு எதிராக அமெரிக்க அரசு அவ்வப்போது கருத்துகளை கூறி வந்தது.

அதோடு சீனாவுக்கு எதிராக இருக்கும் பல நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தந்தது. இதனை போல் சீனாவும் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெற இருக்கின்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க அரசு முறைமை புறக்கணித்து உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அரசு முறையில் புறக்கணிக்க அமெரிக்கா திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளது. சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்பார்கள் ஆனால் அமெரிக்கர்கள் யாரும் செல்ல மாட்டார்கள் என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது.

அமெரிக்க அரசு அதிகாரிகள் யாரும் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இத்தகைய செயல் விளையாட்டில் அரசியல் நுழைக்கும் நடவடிக்கை என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவில் ஸிங்ஜியாங்கில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி அரசு முறை புறக்கணிப்பு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment