பெரியாரை அவமதித்த சும்மா விடுவாரா? நெத்தியடி கொடுத்தார் வைரமுத்து!

தமிழகத்தில் சமூக சீர்திருத்தவாதி என்று அழைக்கப்படுபவர் தந்தை பெரியார். வைக்கம் வீரர் என்று கூட அழைக்கப்படுகிறார். இந்த சூழலில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏராளமான பெரியார் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பலரும் பெரியார் கூறிய சமூக நீதியினை பின்பற்றி வாழ்கின்றனர்.

இந்த சூழலில் பெரியார் சிலை உடைப்பு, பெரியார் சிலையை அவமானப்படுத்துவது நம் தமிழகத்தில் அதிகமாக அரங்கேறிக் கொண்டுதான் வருகிறது. நேற்றைய தினம் கூட கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் பெரியார் சிலை ஒன்று செருப்பு மாலை அணிவித்து காவி பொடி தூவி அவமானப்படுத்தினர்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துனர். கவிஞர் வைரமுத்து தனது கவிதையில் அவர்களுக்கு புரியும்படி கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி பெரியாரை அவமதிக்கிறவர்களுக்கும் பெரியார் தான் ஆசான் என்று அவர்கள் நெத்தியில் அடித்ததுபோல கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

இப்படி ஓர் எதிர்ப்புப் வடிவத்தை கற்றுக் கொடுத்தவரே தந்தை பெரியார் தான் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். வாழ்க வசவாளர்கள் என்றார் அண்ணா  சிறப்புறுக செருப்பாளர்கள் என்போம் நாம் என்று கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment