இந்த யோகம் இருந்தால் அனைத்தையும் கட்டி ஆளலாம்….

374bf0644423c740cd33a34cf8f5e535-1

நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய எதிர்காலம் பற்றி ஒரு சிந்தனை இருக்கும். அந்த சிந்தனை எப்போதும் உயர்ந்ததாகவே தான் இருக்கும். ஏனெனில் நம்முடைய வாழ்க்கை நமக்கு மிக மிக முக்கியம். அந்த வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு நம்முடைய ஜாதகமும் ஒரு காரணம். அந்த ஜாதகம் யோக பலன்  நிறைந்ததாய் இருந்தால் நாம் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக அமையும்.

இதற்கு முன் பல யோகங்கள் பற்றி பார்த்தோம். இன்றும் நாம் இரண்டு யோகங்கள் பற்றி தான் பார்க்க போகிறோம். அந்த யோகங்கள் என்னவெனில் ஸ்ரீகண்ட யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம்.
நம்முடைய ஜாதகத்தில் சூரியன், சந்திரன், லக்கினாதிபதி இந்த மூன்றும் கேந்திரத்தில் உச்சத்தில் இருந்தால் அது ஸ்ரீகண்ட யோகமாகும்.

இந்த யோகம் ஒருவருக்கு கடவுள் மீது மிகுந்த பக்தியை உருவாக்கி கடவுள் அருளை பெறச் செய்யும். குறிப்பாக இந்த யோகம் உள்ளவர்கள் சிவனின் அருளைப் பெறுவார்கள். இரண்டு, ஐந்து, ஒன்பதுக்குரிய ஒருவர் சந்திரனுக்கு கேந்திரத்திலிருந்து விருச்சிகம் அல்லது சிம்ம லக்கினத்தில் பிறந்து இருந்தால் அவர் அகண்ட சாம்ராஜ்ய யோகத்தை பெறுவார்.

மேலும் இந்த யோக பலன் உள்ள ஒருவர் இந்த யோகத்தின் பெயருக்கு ஏற்றார் போல அனைத்து ராஜ்யங்களையும் கட்டி ஆள்பவராக இருப்பர். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.