தெரு நாய்களுக்கு உணவளித்தால் சனி தோஷம் விலகுமா

பொதுவாக இல்லாத உயிர்கள் எதுவாக இருந்தாலும் நம்மால் முடியும் பட்சத்தில் நம்முடைய தயக்கத்தை தூக்கி எறிந்து விட்டு அந்த உயிர்களுக்கு உணவளிப்பதுதான் நல்லது. தற்போதைய பரபரப்பான சூழலில் பெரும்பாலும் மற்ற உயிர்கள் பற்றிய சிந்தனையே பெரும்பாலனவர்களிடத்தில் இல்லை தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றி கொள்வதில் மட்டுமே பெரும்பாலானவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இரக்க மனம் கொண்ட பல மனிதர்களும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்கள். அதில் ஒரு சிலர் நாய்களுக்கு உணவளிப்பதை முழு வாடிக்கையாக வைத்துள்ளார்கள். நாய் மட்டுமல்லாது, பூனை போன்ற தெரு விலங்குகளுக்கும் உணவளிக்கிறார்கள்.

தற்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் பெய்த கடும் கனமழை, வெள்ளத்தில் கூட ஜீவஹாருண்ய சீலர்கள் ஒரு சிலர் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை நம்மால் பார்க்க முடிந்தது.

நாய்களுக்கு தினம் தோறும் உணவளித்து வந்தால் தீராத பல தோஷங்கள் தீரும். இப்போது அதன் பலன்கள் உங்களுக்கு முழுமையாக தெரியாவிட்டாலும் உங்கள் சந்ததிகளுக்கு மிகப்பெரும் புண்ணியத்தை தேடித்தரும்.

தினம் தோறும் பஸ்ஸ்டாண்ட்கள், ரயில்வே ஸ்டேஷன்கள் என அனைத்திலும் தெருநாய்களை பார்க்க முடிகிறது. அவைகள் உணவுக்காக படும் துயர் சொல்லி மாளாது. பசியோடு இருக்கும் ஆதரவற்ற தெருநாய்களுக்கு உணவளியுங்கள். குறிப்பாக தெருநாய்கள் பைரவரின் அம்சம். சனீஸ்வரனின் குரு பைரவர். சனீஸ்வரன் தான் ஒருவருக்கு கர்மகாரகனாக விளங்குகிறார். நாம் செய்யும் பாவ புண்ணியத்தின் அடிப்படையில் நமக்கு கடும் துன்பங்களை தருகிறார்.  அவரின் குருவின் அம்சமான பைரவருக்கு தினம் தோறும் உணவளித்தால் சனீஸ்வரன் அவரால் நமக்கு ஏற்படும் கஷ்டங்களை போக்கி இன்பம் தருவார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment