கட்சிக்கு களங்கமா? விமர்சித்தால் பதிலடி கொடுப்பேன் – காயத்ரி ரகுராம்!

பாஜகவில் அனைத்துவித பொறுப்புகளில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் அடுத்த 6 மாத காலம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் இத்தகைய நடவடிக்கை எடுத்ததாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பாஜக நிர்வாகி ஒருவர் தன்னை தாக்கியதாகவும், இதற்கு திருப்பி பதிலடி கொடுத்தது என்னுடைய உரிமை என கூறியுள்ளார்.

இதனை முன்வைத்து தன்னை சஸ்பெண்ட் செய்வது வருத்தம் அளிப்பதாகவும், பாஜகவிற்காக 8 வருடமாக உழைத்தாக கூறியுள்ளார். அதே போல் வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தபோது சொந்த செலவில் ஏகப்பட்ட நன்மைகளை செய்து வந்ததாக கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் நான் செய்த தவறுகளுக்கு விசாரணை என்பது நடத்தவில்லை என்றும் பாஜகவை பொறுத்தவரையில் தன்னுடைய வளர்ச்சி என்பது முட்டிமோதி வரவேண்டும் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.