Connect with us

ஒரு சிலிண்டர் வாங்கினால் இன்னொரு சிலிண்டர்: அதிரடி அறிவிப்பு!

செய்திகள்

ஒரு சிலிண்டர் வாங்கினால் இன்னொரு சிலிண்டர்: அதிரடி அறிவிப்பு!

595709011194b67c252f39e5c4b453cb

ஒரு சிலிண்டர் அப்ளை செய்தால் இன்னொரு சிலிண்டர் கிடைக்கும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

ஒருசிலர் ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்திருக்கும் நிலையில் அந்த சிலிண்டர் திடீரென காலியாகி விட்டால் திண்டாட்டம் ஆகிவிடும். இந்த திண்டாட்டத்தை போக்கும் வகையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது 
இதன்படி 14.2 கிலோ சிலிண்டர் வாங்குபவர்களுக்கு வாங்குபவர்கள் கூடுதலாக ஐந்து கிலோ சிலிண்டர் ஒன்றையும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்காக அருகில் இருக்கும் இன்டேன் கேஸ் விநியோகஸ்தரிடம் விண்ணப்பம் செய்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது 

அவ்வாறு விண்ணப்பித்து விட்டால் 14.2 கிலோ சிலிண்டர் உடன் ஒரு ஐந்து கிலோ சிலிண்டர் ஒன்றும் சப்ளை செய்யப்படும். அந்த சிலிண்டர் திடீரென சிலிண்டர் காலியானவுடன் உடனே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது 

5 கிலோ சிலிண்டரை வாங்குபவர்களுக்கு ரிவார்ட் புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அந்த ரிவார்டு புள்ளிகள் மூலம் சிலிண்டர் அல்லது பெட்ரோல் டீசல் போட்டுக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top