வள்ளியூர் முருகனை வணங்கினால் கல்யாண வரம் தேடி வரும்

4454aa6dc973c690624c544a194e6842

தற்போதுள்ள விஞ்ஞான உலகில் பலருக்கு திருமணம் என்பதே எட்டாக்கனியாக உள்ளது. குறிப்பாக 90களின் ஆரம்பத்தில் பிறந்தவர்களின் நிலை இதில் மிகவும் கொடுமை. 90களில் பிறந்த பலருக்கு திருமணம் ஆகவில்லை என்பது சமூக வலைதளங்களில் காமெடிக்காக எழுதப்படும் ஒரு விசயமாக ஆகிவிட்டது.

ஆண்கள் இருக்கும் அளவு விகிதாச்சாரத்தில் பெண்கள் இல்லாததும், ஆண்களும் பெண்களும் நாகதோஷம் , செவ்வாய் தோஷம் உள்ளிட்ட பல தோஷங்களால் அவதிப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இப்படி தோஷங்களால் அவதிப்படுபவர்களுக்கு வாழ்வளிக்க வந்தவர்தான் வள்ளியூர் முருகன்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இக்கோவில் உள்ளது. வள்ளியூர் சுப்ரமணியரைத் தரிசித்தால் போதும்… விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார் சுப்ரமண்யர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கு குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் முருகன்  இங்குள்ள முருகனை தரிசித்தால், நமக்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்!

கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை தெப்போத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது. அதையொட்டி நடைபெறும் திருக்கல்யாணத்திலும் மாதந்தோறும் சஷ்டி நாளிலும் இங்கு வந்து ஸ்ரீசுப்ரமண்யரை வேண்டினால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.