வரும் நாட்களில் இப்படி இருந்தால் நிச்சயமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும்!
நம் தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அந்த வரிசையில் இன்றைய தினம் நம் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
பால், மருந்து விநியோகங்களுக்கு எவ்வித தடையும் இல்லை என்றும் தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ஹோட்டல்களில் பார்சல் விநியோகத்திற்கு மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் சிறு, குறு தொழில் செய்பவர்களும் முழு ஊரடங்கு பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். வரை இருக்கின்ற வாரங்களிலும் தொடர்ந்தால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார்.
வரும் வாரங்களில் கொரனோ தொற்று குறைந்தால் நிச்சயமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதனால் அடுத்த வாரம் முழு ஊரடங்கு இருக்குமா? இல்லையா? என்பது வரும் நாட்களில் பதிவாகும் கொரோனா பாதிப்புகள் பொறுத்துதான் அமையும் என்பது தெளிவாகிவிட்டது
