எச்சரிக்கை இவைகளெல்லாம் இருக்குதா?அப்போ நிச்சயமாக உங்களுக்கு டெங்கு தான்!!

தற்போது நம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்ற நிலையில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் ஆனது ஏடிஸ் வகை கொசு வினால் பரவுகிறது.

டெங்குஅதற்கான அறிகுறிகள் என்னவென்றால் இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு விட்டு காய்ச்சல் வருதல். காய்ச்சலின் போது வாய் பகுதியை சுற்றிலும் நிறம் மாறுவது போன்றவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

கண்கள் சிவந்து காணப்படுவது மற்றும் முகத்தில் தடிப்புகள் ஏற்படும் ஒருவிதமான அறிகுறியாகும். தொடர்ந்து குளிர்ச்சியை உணர்தல், தலைவலி, கண்களை நகர்த்தும் போது வலி, கீழ் முதுகு பகுதியில் வலி போன்றவை ஏற்பட்டால் அவை நிச்சயமாக டெங்கு அறிகுறியாகும்.

ரத்த வாந்தி, கருப்பு நிற மலம் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படுவது டெங்குவின் அறிகுறியாகும். கால்களின் மூட்டுகளில் கடுமையான வலியுடன் கூடிய காய்ச்சல் ஏற்படும். உடலில் பிளேட்லெட் எனப்படும் ரத்த தட்டணுகளின் எண்ணிக்கை குறையும்.

ரத்த உறைவு பிரச்சனை ஏற்பட்டு நோய் பாதிப்புகாலம் அதிகரிக்கும். டெங்கு உடலை பலவீனப்படுத்தி தசை மற்றும் மூட்டுகளில் வலியை ஏற்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில மாதங்களாவது ஆகும். உட்புற ரத்தக்கசிவு உடல் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யும் மருத்துவமனைக்கு செல்லாமல் அறிகுறிகள் அலட்சியப்படுத்துவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment