அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன? அதிமுக ஆட்சியை இழந்தது எப்படி? மேலும் பல சுவாரசியமான விவாதம்….

தமிழகத்தில் இன்றைய தினம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என மாறிமாறி விவாதம் புரிந்தனர். அதனால் இன்றைய தினம் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் மூடப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

அம்மா உணவகம்

அதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போது ஏற்படுத்திய திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டது ஏன்? என்று பதில் கேள்வி கேட்டார். அதன்பின்னர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அம்மா உணவகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாகவும், அம்மா உணவகத்தில் பொருட்களின் வரத்து குறைந்து வருவதாகவும் மீண்டும் சட்டப்பேரவையில் குற்றச்சாட்டை வைத்தார்.

இந்த குற்றச்சாட்டை அமைச்சர் கே.என். நேரு சந்தித்தார். இதன் மத்தியில் குறுக்கிட்ட மற்றொரு அமைச்சர் துரைமுருகன் அம்மா உணவகம் மூடினால் தான் என்ன? என்று பதில் கேள்வி கேட்டார். இதனால் அவையில் சலசலப்பு நிகழ்ந்தது. அதன் பின்னர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மு. கருணாநிதி செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தையும் முடக்கியதால்தான் இன்று அதிமுகவினர் ஆட்சியை இழந்து அவதிப்படுகின்றனர் என்று அவையில் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment