Connect with us

ஸ்டெர்லைட்டை திறந்தால் போராட்டம் வெடிக்கும் – சீமான் எச்சரிக்கை

sterlite

தமிழகம்

ஸ்டெர்லைட்டை திறந்தால் போராட்டம் வெடிக்கும் – சீமான் எச்சரிக்கை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் போராட்டம் வெடிக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது

கொலை எண்ணிக்கையை காவல் துறை உயர் அதிகாரிகள் வெளியே குறைத்து சொல்கிறார்கள். அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே கொலை கொள்ளை குற்றங்களை குறைக்க முடியும் என சீமான் தெரிவித்தார்.

மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார் நான்கு மாதங்கள் ஆகியும் அறிக்கையை அரசு வெளியிடாத காரணத்தால் தற்போது கசிய விடப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் வேறு இடத்தில் பணி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என நாம் தமிழர் சீமான் எச்சரிக்கை விடுத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top