Connect with us

ரேஷன் அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை!!!

ரேஷன் அரிசி

தமிழகம்

ரேஷன் அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி வெளி மாநிலங்களில் இருக்கும் ஆலைகளில் பாலிஸ் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இவற்றை தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வர வேண்டும் என பல கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்  சென்னையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

அப்போது பேசிய அவர் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்ட அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கினார். குறிப்பாக வசதி படைத்த பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்களா? என்பதை அறிக்கை மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து ரேஷன் உணவுப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top