நான் முதல்வரானால் கண்டிப்பா இதைச் செய்வேன்… வாணி போஜன் பேச்சு…

நீலகிரி மாவட்டம் ஊட்டியை பூர்வீகமாக கொண்டவர் நடிகை வாணி போஜன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு இண்டிகோவில் விமான பணிப்பெண்ணாக தனது வாழ்க்கையை தொடங்கினர் வாணி போஜன். பின்னர் தி சென்னை சில்க்சின் விளம்பரத்தில் மாடலாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதுவே அவர் திரையுலகில் நுழைய வழி வகுத்தது.

2012 ஆம் ஆண்டு விஜய் டிவியின் ‘ஆஹா’ மற்றும் ஜெயா டிவியின் ‘மாயா’ ஆகிய தொடர்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் 2013 ஆம் ஆண்டு சன்டிவியின் ‘தெய்வமகள்’ தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து புகழடைந்தார்.

பின்பு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி ஹிட்டான படங்களில் நடித்தப் பிறகு 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வனுக்கு ஜோடியாக ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் வெப் சீரிஸான ‘ட்ரிபிள்ஸ்’, வைபவ் உடன் இணைந்து ‘லாக் அப்’, ‘ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்’ ஆகிய படங்களில் நடித்தார். எந்த கதாபாத்திரம் ஆனாலும் சிறப்பாக நடிப்பவர் வாணி போஜன்.

தற்போது விதார்த் உடன் இணைந்து வெளிவர இருக்கும் ‘அஞ்சாமை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். பட ப்ரோமோஷனுக்காக பல நேர்காணல்களில் கலந்து வரும் வாணி போஜனிடம், நீங்கள் முதல்வரானால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, நான் முதல்வரானால் கண்டிப்பாக மக்கள் அனைவருக்கும் இலவசமாக கல்வியை கொடுப்பேன் என்று கூறியுள்ளார் வாணி போஜன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...