ஐசியூ-க்கு 20 நிமிடம் தாமதமாக போயிருந்தால் ரத்தக்குழாய் வெடித்து இருக்கும்!-ரிஸ்வான்;

2021 ஆம் ஆண்டுக்கான t20 வேர்ல்டு கப்பை ஆஸ்திரேலியா அணி வென்றது. ஆனால் பலரும் எதிர்பார்த்த அணி என்றால் பாகிஸ்தான் என்றே கூறலாம். ஏனென்றால் இந்த டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் பலரையும் வியக்கத்தக்க இருந்தது.

பாகிஸ்தான்

குறிப்பாக பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி மிக வலிமையான அணியாக இந்த டி20 தொடரில் ஜொலித்தது. இருப்பினும் அரையிறுதிப் போட்டியில் எதிர்பாராதவிதமாக நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி தோற்றுப்போனது.

ஆனால் பாகிஸ்தான் அணி தோற்றுப் போனதை பலரும் பேசாமல் ஐசியூவில் இருந்து சிகிச்சை பெற்ற ரிஸ்வான் ஆட்டம்தான் உலகமெங்கும் பரவியது.

அரை இறுதிப் போட்டிக்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான ரிஸ்வான் ஐசியூவில் மூச்சுத்திணறலால் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடனே அரையிறுதிப் போட்டியில் கலந்துகொண்டு, அதிரடியாக ஆடி 67 ரன்களை குவித்தது கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ரிஸ்வான்

இதுகுறித்து தற்போது பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வான் கூறியுள்ளார். அதன்படி தான் மூச்சுவிட முடியாத நிலைமையில் ஐசியூ அழைத்து செல்லப்பட்டேன் என்றும் அங்கு மருத்துவர்கள் தங்களுக்கு சிறப்பாக முறையில் சிகிச்சை அளித்தார்கள் என்றும் கூறினார்.

அதோடு மட்டுமில்லாமல் இன்னும் 20 நிமிடம் தாமதமாக சென்று இருந்தால் மூச்சு குழாய் வெடித்திருக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். துபாயில் மருத்துவம் பார்த்து ஒரு இந்திய மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment