ஏலியன்களை கண்டுபிடித்தால் முதலில் டுவிட் செய்வது நானாகத்தான் இருப்பேன்: எலான் மஸ்க்..!

ஏலியன்கள் உண்மையில் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் ஒருவேளை ஏலியன்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் முதலில் டூயட் செய்து அதை உலகுக்கு தெரிவிப்பது நாளாக தான் இருக்கும் என்று எலான் மாஸ் தெரிவித்துள்ளார்

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வானியல் குறித்து நன்கு அறிவு உடையவர் என்பதும் நிலாவில் அவர் மனிதர்களை குடியேற வைக்க முயற்சித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் பல வானியல் சம்பந்தமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து உள்ளது என்பதும் இன்டர்நெட் யுகத்தில் பல சாதனைகளை புரிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த எலான் மஸ்க் ஏலியன்கள் குறித்த பல கேள்விகள் என்னிடம் கேட்கப்படுகிறது என்றும் அதற்கு நான் சொல்லும் பதில் என்னவெனில் இதுவரை ஏலியன்கள் குறித்த எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை என்றும் அவர் தெரிவித்தார்.

elon muskஒருவேளை ஏலியன்கள் வேறு கிரகத்திலோ அல்லது பூமிக்கு வந்தால் அந்த தகவல் எனக்கு தான் முதலில் கிடைக்கும் என்றும் அதை நான்தான் முதலில் ட்விட் செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார். ஏலியன்கள் என்பது இதுவரை ஒரு கற்பனை கதாபாத்திரமாகவே உள்ளது என்றும் அறிவியல் பூர்வமான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் கிடைத்தால் மட்டுமே ஏலியன்களை ஒப்புக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏலியன்கள் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன என்பதும் இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா உள்பட பல நாடுகள் ஏலியன்கள் குறித்த பல தகவல்களை வெளியிட்டது என்பதும் ஏலியன்கள் பூமிக்கு ஆகப்போகுது வந்து கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இதுவரை இல்லை என்று எலான் மஸ்க் கூறுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.