Connect with us

மகளைவிட நன்றாக படிப்பதா? மாணவனுக்கு விஷம் கொடுத்தால் பரபரப்பு!!

மாணவன்

தமிழகம்

மகளைவிட நன்றாக படிப்பதா? மாணவனுக்கு விஷம் கொடுத்தால் பரபரப்பு!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த நேருநகர் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரம் – மாலதி என்பவரின் மகன் பாலகண்டன். இவர் இவர் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினத்தில் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு கொடுத்த குளிர்பானத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது.

இந்த சூழலில் குளிர்பானத்தை குடித்த அவர் திடீரென மயக்கம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதேசமயம் சந்தேகம் அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெண்மணி ஒருவர் தனது உறவினர் குளிர்பானம் கொடுத்தாக சொல்லி மாணவருக்கு பள்ளியின் காவலாளி மூலம் கொடுத்துள்ளனர்.

இதனிடையே தனது மகளை விட மாணவன் நன்றாக படிப்பதால், ஆத்திரத்தில் மாணவியின் பெற்றோர் இத்தகைய செயலில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top