தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 40 வருடங்களுக்கு பிறகு காணாமல் போன சிலைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இதுவரையில் 10-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டுள்ளனர்.
தற்போது 40 ஆண்டுகளுக்கு முன் பாலு என்பவர் விநாயகர் சிலை காணாமல் போனதாக புகார் கொடுத்தார். இது குறித்து லை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில் தமிழக கோயில்களில் இருக்கும் இரண்டு சிலைகள் அமெரிக்காவில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதன் படி, நாகை திருத்துறைப்பூண்டி பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோயிலில் திருடப்பட்ட தேவி, விநாயகர் ஆகிய இரண்டு சிலைகள் அமெரிக்காவில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
குறிப்பாக புகைப்படங்களை வைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உறுதி செய்து உள்ளனர். இந்த 2 சிலைகள் 1970 காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும், இரண்டு சிலைகளையும் மீட்கும் பணியில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அதே போல் இந்த கோயிலுக்கு சொந்தமான 11 சிலைகள் காணாமல் போனதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த வகையில் சோமாஸ்கந்தர், சந்திர சேகர அம்மன், தேவி, அஸ்திரதேவர், பிடாரி, அம்மன், நவக்கிரக சூர்யா உள்ளிட்ட 11 சிலைகள் திருடுப்போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.