ஐசிஐசிஐ முன்னாள் வங்கி தலைவர் கணவருடன் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் என்பவரும் அவருடைய கணவர் தீபக் கோச்சார் என்பவரும் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கி தலைவராக இருந்த சாந்தா கோச்சார் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.

ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ரூ.3650 கோடி ரூபாய் வீடியோகான் நிறுவனத்திற்கு அவர் விதிமுறைகளை மீறி கடன் வழங்கியதாகவும் அந்த கடன் தொகையை சாந்தா கோச்சார் கணவர் தீபக் என்பவருடைய நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகவும் பின்னர் வீடியோகான் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடன் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்த நிலையில் முதல் கட்டமாக சாந்தா கோச்சார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட அவர் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு வழக்கில் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.