நான்கு வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு!

25b39d95dfef543cd6e2d94a4bbd737e

தமிழகத்தில் சில நாட்களாகவே கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பல பணிகள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டது. மேலும் பல நிறுவனங்களின் தொழில் முடக்கமும் அதிகமாகவே காணப்பட்டது. இதன் விளைவாக மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு ஓரளவு காணப்படுகிறது.59c303106b04eb7ca677d3eef998f436

மேலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இந்த சூழலில் தற்போது  தமிழகத்தின் முதன்மை நீதிமன்றமாக கருதப்படுகின்ற சென்னை உயர் நீதிமன்றம் தற்போது சில அதிரடி உத்தரவுகளை வழங்கியுள்ளது. அதன்படி கொரோனா  ஊரடங்கு காரணமாக தடைபட்ட மாநகராட்சி பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் வழங்க கோரி ஐகோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஒப்பந்தக்காரர்கள் அளித்த மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா  ஊரடங்கால் மாநகராட்சி பணிகளை முழுமையாக முடிக்க வில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. மேலும் சென்னை மாநகராட்சி ஒப்பந்தக்காரர்கள் நல சங்கம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment