ஐஏஎஸ் அதிகாரிகள் ஜனவரி மாதத்திற்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: இறையன்பு;

நம் தமிழகத்தில் தலைமைச் செயலாளராக உள்ளார் இறையன்பு. அவர் கடந்த சில நாட்களாகவே மாவட்ட ஆட்சியர்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு வருகிறார். குறிப்பாக இதற்கு முன்பு எழுதிய கடிதத்தின் போது தமிழகத்தில் சலசலப்பான சூழ்நிலை உருவானது.

இறையன்பு

இந்த நிலையில் அவர் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி தமிழகத்தில் பணியில் உள்ள அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமின்றி தங்கள் குடும்ப உறுப்பினர் சொத்து விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சரியான காரணமின்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment