Entertainment
கவினிடம் இனி பேசமாட்டேன்- லாஸ்லியா!!
இப்போதுதானே தொடங்கியது என்று நினைத்து முடிக்கையில், இல்லை இல்லை இன்னும் முடியவே 30 நாட்கள் மட்டுமே உள்ளது என்கிற நிலையில் செல்கிறது பிக் பாஸ் 3.
சரோஜா சாமா நிக்காலோ என்ற பாடலுடன் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. அனைவரும் காலையிலேயே குத்தாட்டம்போட்டு நிகழ்ச்சியினை குதூகலமாக்கினர்.

அதன்பின்னர் சாண்டி, தர்ஷன், கவின், ஷெரின் ஆகியோர் எவிக்ஷன் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது கவின் ஏதோ நல்லவர்போல, 70 நாட்கள் முடிந்துவிட்டது. இன்னும் 30 நாட்கள் உள்ள நிலையில், நாம் இருவரும் பேசிக்கொள்வது நல்லதல்ல, மேலும் இவை அனைத்தையும் வெளியில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று லோஸ்லியாவிடம் கூறிவிட்டதாக கவின் சாண்டியிடம் கூறினார்.
அப்போது முதல் முறையாக சாண்டி லாஸ்லியாவிற்கு நேரடியாக அறிவுரை கூறினார், லாஸ்லியா நீ யோசித்துப் பார். இந்த நிகழ்ச்சியை உன்னுடைய அப்பா பார்த்துக்கொண்டிருப்பார். அவர் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்பதுபோல அறிவுரை வழங்கினார்.
இதனைக் கேட்டதும் லோஸ்லியாவின் முகம் மாறியது, பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருப்பதுபோல முகத்தினை வைத்துக் கொண்டார். அப்போது லாஸ்லியா இனிமேல் பேசமாட்டேன் என்று கூறினார்.
